தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வப்போது சில சர்ச்சைகளை சந்தித்தாலும் நல்ல படியாக ஒளிபரப்பாகி வருகிறது.

மற்ற மொழிகளில் இரண்டாவது சீசனை தொட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்தியில் தற்போது 12 ஆவது சீசனை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி  இந்தியில் 11 சீசனில்,கலந்து கொண்டு விளையாடியவர் நடிகை ஹினாகான். இவரிடம் ரசிகர்கள் பலருக்கு பிடித்தது என்றால் இவருடைய டிரெஸ்ஸிங் சென்ஸ். எப்படி தன்னை வித்தியாசமான உடையால் அழகாய் காட்டி கொள்ளலாம் என்கிற வித்தை அறிந்தவர்.

அதே போல் சில சமயங்களில் இவர் அணியும் ஆடை காரணமாக இவரை ரசிகர்கள் விமர்சித்ததும் உண்டு.
 
இந்நிலையில் ஒரு நகைக்கடையின் விளம்பரத்தில் நடிப்பதற்காக அந்த நகைக்கடையில் இருந்து சுமார் 12 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்து படப்பிடிப்புக்கு பயன்படுத்தியுள்ளார் ஹினாகான். ஆனால் படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும்  அந்த நகையை அவர் இன்னும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.

பல முறை அந்த கடை உரிமையாளர் நகையை வாங்க நேரில் சென்றும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்ததால். தற்போது அந்த நகை உரிமையாளர் இவர் மீது மோசடி புகார் தெரிவித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.