பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில நாட்களாக விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் வைஷ்ணவியை எலிமினேட் செய்வதாக அறிவித்த பிக் பாஸ், அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பாமல் ரகசிய அறையில் அடைத்து வைத்திருந்தார்.

முன்பு சுஜாவிற்கு கிடைத்த இந்த வாய்ப்பு இப்போது வைஷ்ணவிக்கு கிடைத்திருக்கிறது. இதனால் வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களின் உண்மை முகத்தை அறிய ஒரு முடிந்தது. இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவி பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்திருக்கிறார்.

அவரின் வருகை சக போட்டியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்பது அவர்களின் முகபாவத்தில் இருந்தே தெரிகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த வைஷ்ணவி தற்போது ஜனனி, யாஷிகா, மஹத் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு அறிவுரை கூறுவது போல ஒரு பிரமோ வெளியாகி இருக்கிறது.

 

தெரிஞ்சுடுச்சா, எல்லாம் தெரிஞ்சுடுச்சா 🤣😂 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/dRbyVAcy4Z

— Vijay Television (@vijaytelevision) August 2, 2018

அந்த பிரமோவில் வைஷ்ணவி மஹத்திடம் நீங்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதம் ரொம்ப கேவலமா இருக்குது. இந்த நிகழ்ச்சியில் உங்க இமேஜை நீங்க இரண்டுபேரும் ரொம்ப கேவலமா தரமட்டமா டேமேஜ் பண்ணிக்கிறீங்க! என கூறுகிறார். மஹத் மற்றும் யாஷிகா இந்த நிகழ்ச்சியில் நடந்துகொள்ளும் விதம் ஏற்கனவே  விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைதான் வைஷ்ணவி குறிப்பிடுகிறாரா? என நிகழ்ச்சியின் போது தான் தெரியும்.