பிரபல தெலுங்கு நடிகை சஞ்சனா, இவர் தெலுங்கில் நடைபெற்று வரும் பிக்பாஸ் 2வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர். பிரபல மாடலான சஞ்சனா, 2016ம் ஆண்டு மிஸ் ஐதராபாத் பட்டத்தையும் வென்றுள்ளார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் சஞ்சனா, மாடலிங் துறையில் பிசியாக உள்ளார். சில நாட்களுக்கு முன்பு மந்தாப்பூரில் உள்ள நைட் கிளப் ஒன்றிற்கு சஞ்சனா சென்றுள்ளார். 

அப்போது அந்த கிளப்பிற்கு தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகனும், பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவருமான நந்தேஷ்வர் கவுடுவின் மகன் ஆஷிஷ் கவுடு வந்துள்ளார்.சுமார் 2 மணி அளவில் பப்பின் ஒரு ஓரத்தில் நின்று மியூசிக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சனா மற்றும் அவரது தோழிகளை, ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது நண்பர்கள் அனுகியுள்ளனர். 

இதையும் படிங்க: பாத்டப்பில் பதறவைக்கும் கவர்ச்சி... அரைகுறை ஆடையில் ரியாசென்னின் ஓவர் கிளாமர்... சோசியல் மீடியாவை தெறிக்கவிடும் ஹாட் போட்டோஸ்...!

முதலில் நண்பர்களைப் போல பேசிய அவர்கள், தொடர்ந்து அப்பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரட்டை அர்த்த வசனங்களை பேசிய படி அவர்களிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். இதையடுத்து கிளப்பை விட்டு வெளியேறிய சஞ்சனா, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். சஞ்சனாவின் புகாரை அடுத்து ஆஷிஷ் கவுடு மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பப்பில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.