பாரதிராஜாவின் காலைக் கழுவி விடும் இலங்கைத் தமிழர்’ இந்த கேவலத்தைக் கேட்பாரில்லையா?
வைரமுத்து சம்பந்தமான பஞ்சாயத்துகளில் அதிகம் தலையிட வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ, சமீபத்தில் இலங்கைக்கு உல்லாசப்பயணம் போய்த்திரும்பியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
வைரமுத்து சம்பந்தமான பஞ்சாயத்துகளில் அதிகம் தலையிட வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ, சமீபத்தில் இலங்கைக்கு உல்லாசப்பயணம் போய்த்திரும்பியிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
இப்பயணத்தின்போது இலங்கைத் தமிழர்கள் சிலர் ஏதோ ஒரு சடங்குக்காக அவரது காலைக் கழுவி விடுவது போல் வெளியான புகைப்படம் ஒன்றைப் பார்த்து இப்போது வலைதளங்களில் அவரை கழுவிக்கழுவி ஊற்றுகிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக தொண்டை கிழியக் கத்தும் இமயம் இப்படி சாக்கடைத்தனமாக நடந்துகொள்ளலாமா? என்றெல்லாம் கொக்கரிக்கின்றன பல பதிவுகள்.
அவற்றில் ஒரு பதிவு இதோ... மட்டக்களப்பிற்கு சென்ற பாரதிராஜா குழுவினர் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது, மட்டக்களப்பில் பாரதிராஜாவின் கால்களை ஒருவர் கழுவி வரவேற்கின்றார்????? மட்டக்கிளப்பு மக்களுக்கு புத்தி பேதலித்து விட்டதா??? மாதா,பிதா, குரு தெய்வத்தை தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்று மட்டக்கிளப்பு முன்னோர்கள் சொல்லிதரவில்லையா????