மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாரதிராஜா வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் 'ஓம்'  

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியில் இருக்கும் இந்த படத்தில் இசைவெளியீட்டு விழா வரும் 9 ஆம் தேதி, கலைவாணர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெற இருந்தது.

ஆனால் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதியின் உடல் நிலையில், மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால், 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை திடீர் என ரத்து செய்து வேறு ஒரு தேதிக்கு மாற்றம் செய்வதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் 'தலைவர் கலைஞர்' உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து மீண்டு வரவேண்டும் என்றும், நூற்றாண்டு கடந்து தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் என்றும் பிரத்தனை செய்வதாக கூறப்பட்டுள்ளது.