பிக் பாஸ்  கொடுத்திருக்கும் புது டாஸ்கில் சக போட்டியாளர்களுக்காக ஒவ்வொருவருமே பிக் பாஸ் கொடுத்த கட்டளையை நிறைவேற்றி இருக்கின்றனர். மொட்டை அடிப்பது, முடிவெட்டுவது, முடியை கலர்செய்வது, சாணியில் மூழ்கி எழும்புவது, பச்சை குத்துவது என கொடூரமான டாஸ்குகளை எல்லாம் கொடுத்து வருகிறார் பிக் பாஸ். 

சக போட்டியாளரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தியாக மனப்பான்மையுடன் இவை அனைத்தையும் மறுக்காமல் செய்திருக்கின்றனர் பிக் பாஸ் போட்டியாளர்கள். அதிலும் ரித்விகா நிரந்தரமாக பச்சைகுத்தி கொண்டது எல்லாம் நிஜமாகவே அதிகப்படியான விஷயம் தான். இதில் ரித்விகாவுக்காக மும்தாஜ் முடிய பச்சை நிறமாக கலர் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இன்றைய டாஸ்க். 

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் மும்தாஜ். இத்தனை பேரும் எவ்வளவோ கஷ்டமான டாஸ்குகளை கடந்து வந்திருக்கும் நேரத்தில் மும்தாஜ் மட்டும் முடியாது என மறுப்பது சக போட்டியாளர்களை கடுப்பாக்கி இருக்கிறது. ஆனால் மும்தாஜ் மட்டும் என் அம்மாவுக்காக கூட இதை நான் செய்ய மாட்டேன் என உறுதியாக மறுத்து வருகிறார். இதனால் கடுப்பான விஜயலஷ்மி “இனி மும்தாஜ் அன்பு அன்புனு யார்கிட்டயும் போய் உட்கார முடியாது.” என கூறி இருக்கிறார். 

அதே போல பாலாஜியும் இத்தனை நாள் மும்தாஜ் செய்தது எல்லாம் நடிப்பு என்பது போல பேசி இருக்கிறார். ஆரம்பம் முதலே இந்த இருவருக்கும் மும்தாஜ் மீது கடுப்பு இருந்துவருகிறது. அதை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வலுவாக காட்டுகின்றனர் பாலாஜியும் , விஜயலஷ்மியும்.  அதே சமயம் ரித்விகா உடம்புக்கு முடியாதபோது கூட டாஸ்க் நல்லா செஞ்சாங்க. ஆனா மும்தாஜ் இப்படி அவங்களுக்கு உதவ மாட்டேனுட்டாங்களே என வருத்தப்படுகிறார் யாஷிகா. 

மொத்தத்தில் மும்தாஜ் என்ன முடிவு எடுக்க போகிறாரோ, அதை பொருத்து தான் அவர் மீதான மக்கள் அபிப்ராயம் இனி மாறும், என்பதை மறைமுகமாக கூறி இருக்கிறது இந்த பிரமோ.