‘96 படம் குறித்த முக்கிய விமர்சனங்களில் ஒன்று. அது சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தை அப்படியே ஞாபகப்படுத்துகிறது என்பது. திரை உலகமே மறந்துபோன தன்னையும் பொருட்படுத்தி செய்திகள் உலா வருகின்றனவே என்று மவுனமாக ரசித்துவந்த சேரன் இன்று தனது ட்விட்டர் பதிவின் மூலம் ‘96 படத்தை எனது ஆட்டோகிராஃபுடன் ஒப்பிடாதீர்கள். அந்த உணர்வும் இந்த உணர்வும் வெவ்வேறானவை. 

அதே போல் விஜய் சேதுபதியும் திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு குதியுடையவர்களாகிறார்கள். இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார்...  இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும்’ என்று படத்தை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் சேரன். 

காதல் படங்களை மக்கள் கண்ணை மூடிட்டுக் கொண்டாடுறதால உங்க ரெஸ்ட்டுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு பேசாம ‘ஆட்டோகிராஃப்2’ வை ஆரம்பிச்சிரலாமே சேரன்.