Asianet News TamilAsianet News Tamil

மேலாடையை கழற்றும் அமலாபால்! அசரடிக்கும் 'அதோ அந்த பறவை போல' டீசர்!


 பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'ஆடை' படத்திற்கு பிறகு, நடிகை அமலாபால் நடிப்பில் வெளிவரவுள்ள படம் 'அதோ அந்த பறவை போல'. இதில், இளம் தொழிலதிபராக அவர் நடித்துள்ளார். 
 

atho anda paravai pola teaser
Author
Chennai, First Published Nov 13, 2019, 9:37 PM IST

இந்தப் படத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, பாலிவுட் நடிகர் சமீர் கோச்சார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். 
இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்குகிறார். அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக 'அதோ அந்த பறவை போல' உருவாகியுள்ளது. 

atho anda paravai pola teaser

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் ராஜகோபாலன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.


நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து, தற்போது ரிலீசுக்கு ரெடியாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசரை, நவம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு ராக் ஸ்டார் அனிருத் வெளியிடுவார் என அறிவித்தது. 

atho anda paravai pola teaser

அதன்படி, 'அதோ அந்த பறவை போல' படத்தின் டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அனிருத், தனது நண்பர் அமலாபாலுக்கும், படக்குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


1 நிமிடம் 40 விநாடிகள் ஓடும் இந்த டீசரில், ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே அமலாபால் செம விருந்து அளித்துள்ளார்.  

atho anda paravai pola teaser

காண்போரை அசரடிக்கும் வகையில், ஆக்ஷன் அட்வெஞ்சரில் அமலாபால் மிரட்டியிருக்கும் 'அதோ அந்த பறவை போல' டீசர், சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது. 

atho anda paravai pola teaser
"உலக நாயகி அமலாபால் கோதால்ல இறங்கி அடிக்கிறீங்கோவ்... வாழ்த்துக்கள் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க!" என்பது போன்ற கமெண்ட்டுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

கடைசியாக வெளியான ஆடை டீசரில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், இந்த முறை அதோ அந்த பறவை போல டீசரில் அமலாபால் மிரட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios