அசோக் குமார் தற்கொலை...குழுக் கலவரம் வெடிக்கும் அபாயம்!
நடிகர் சசிகுமார் உறவினரும், துணை தயாரிப்பாளருமான அசோக் குமார், கடந்த வாரம் கந்து வட்டிக்குக் கடன் பெற்று அதனை திரும்பக் கொடுக்க தாமதமானதால் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் பைனான்சியர் அன்புசெழியன் தன்னை அவமானப்படுத்தியதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்உயிரையும் மாய்த்துக்கொண்டார்.
இந்நிலையில் அசோக் குமார் தற்கொலைக்குக் காரணமான அன்புசெழியனை கைது செய்யவேண்டும் என அவருக்கு எதிராக ஒரு அணியினரும்... அன்பு செழியன் மிகவும் நல்லவர் அன்பானவர் அனைவரையும் மதிக்க தெரிந்தவர் என திரைதுரைக்கு உள்ளேயே இரு அணியாகப் பிரிந்து மோதிக் கொண்டு வருகின்றனர்.
தற்போது... அன்பு செழியனுக்கு ஆதரவாக ஒரு சிலர் ஊடகங்களில் ஜாதி பெயர்களைக் கூறி தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக செய்திகள் வெளியாவதாகக் கூறி.. தயாரிப்பாளர் மணிமாறன் என்பவர், தியாகராய நகரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து அன்புசெழியன் மீது புகார் கொடுத்தார். இதே போல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் மனு கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த வீடியோ தொகுப்பு...