‘ஹலோ பிரபா ஒயின் ஷாப்பா கடையை எப்ப சார் திறப்பீங்க’ என்கிற ரேஞ்சில் ‘என்ன எப்ப சார் நடிக்கக் கூப்பிடுவீங்க’ என்று லைகா நிறுவனத்தின் அழைப்புக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார் நடிகர் ஆர்யா.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தன் வருங்கால மனைவி சாயிஷா நடிக்கும்  ‘காப்பான்’ படத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் வேண்டுகோளுக்காக ஒரு குட்டிக் கதாபாத்திரத்தில் எட்டிப்பார்த்திருக்கிறார் ஆர்யா. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லைகா நிறுவனம் ஆர்யாவை சோலோ ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாம்.

இந்த சம்பவம் நடந்தது கடந்த ஜூலை மாதம். ஆனால் ‘காப்பான்’ முடிந்து போஸ்ட் புரடக்‌ஷன் பணிகளும் துவங்கிவிட்ட நிலையில், தன்னை ஹீரோவாக வைத்துத் தயாரிப்பதாகச் சொன்ன படம் என்ன ஆச்சு என்ற கேள்விக்குறியுடன் இத்தனை மாதங்களும் காத்திருந்த ஆர்யா அங்கிருந்து எவ்வித அழைப்பும் வராத நிலையில், ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’ படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையாவை தயாரிப்பு நிறுவனத்துக்கே அனுப்பி ஒரு கதை சொல்லவைத்தாராம் ஆர்யா.

அந்தக் கதையைக் கேட்டு ரிஜக்ட் செய்த தயாரிப்பாளர் ஒரு கன்னட ரீமேக்கை சிபாரிசு செய்திருக்கிறாராம். விரைவில் ஆர்யா, லைகா காம்பினேஷன் அறிவிப்பு வரலாம். அல்லது ஒரு  அல்வா பொட்டலம் பார்சலாக வரலாம்.