நடிகர் விஷாலும் வரலக்ஷ்மியும் காதலித்து வருவதாக வதந்திகள் தொடர்ந்து பரவி வரும் சமயத்தில் வரலட்சுமியை பற்றி அவ்வப்போது விஷால் புகழ்ந்து வருவது வாடிக்கையாகி  விட்டது. இந்நிலையில் சண்டைகோழி படத்தில், இறுதி காட்சியான சண்டை காட்சி மிகவும் பிரமாதமாக நடித்து கொடுத்துள்ளார் வரலட்சுமி என  தனது ட்விட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளி உள்ளார். 

இதற்கு முன்னதாக, ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஷால், வரலக்ஷ்மி  தன்னுடைய சிறந்த  தோழி என்றும்...அவர் தான் தன்னை பல வழிகளில் உறுதுணையாக உள்ளார் என்றும் புகழ்ந்து பேசி இருந்தார்.

இதுவரை இவர்கள் இருவரும், தங்களுடைய காதலை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், அவர்களின்  நடத்தை இருவரின் காதல் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.  

விஷால் தனது  ட்விட்டில் ஒரு படி மேலே சென்று டார்லிங் வரு என கூறி உள்ளார். இதையெல்லாம் கவனித்த நடிகர் ஆர்யா, மச்சா இதை நீ தான் டைப் செய்தியா இல்ல  வரு..? என கிண்டல் செய்து உள்ளார்.