நடிகர் ஆர்யா கடந்த வருடம் மகாமுனி, காப்பான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, தற்போது தன்னுடைய மனைவி சாயிஷாவுடன் சேர்ந்து, 'டெடி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் '3 தேவ்' என்கிற பாலிவுட் படம் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அடுத்ததாக இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, குத்துசண்டை விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக ஆர்யாவும் தன்னுடைய உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின.

மேலும் நேற்று, ஆர்யா தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்று மாலை 5 மணிக்கு முக்கிய தகவலை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

அதன் படி தற்போது, மெட்ராஸ், காலா, கபாலி, ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இணைந்து நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர் போட்டுள்ள பதிவில்... " விளையாட்டு சம்பந்தமான படங்கள் மீதான என்னுடைய காதல் குறையாது. அடுத்ததாக குத்து சண்டை படத்தில் நடிக்க உள்ளேன். இது மிகவும் சவாலான திரைப்படம் என கூறி ட்விட் செய்துள்ளார். 

இதன் மூலம், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க போகிறார் என்கிற தகவல்கள் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், அதனை உறுதி செய்து ட்விட் போட்டுள்ளார். இப்படத்திற்காக அதிக மெனக்கெட்டு, அடையாளம் தெரியாமல் உடலில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் ஆர்யா.