இன்றைய தேதிக்கு தென் தமிழகத்தில் ஒரு பெண் பிரபலம், லைம் லைட்டுக்கு வரவேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?.... ஒண்ணுஞ்செய்ய வேணாம் ‘சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம்’ அப்படிங்கிற உத்தரவு சம்பந்தமா நேர்மறையாவோ அல்லது எதிர்மறையாவோ ஏதாச்சும் கருத்துச் சொன்னாலே போதும்! லைக்ஸ் அள்ளிக்கும். 

கண்ணுக்கே தெரியாமல் போயிருந்த சில பிரபலங்கள் இப்போது இந்த தீர்ப்பு மீதான கமெண்ட்ஸ் மூலமாக மீண்டும் சீனுக்குள் வந்திருக்கிறார்கள். நம்ம அருவி அதிதியும் இதை அட்ராசக்கையாக பயன்படுத்தியிருக்கிறார். எப்டியாம்? இப்படித்தான்...

இந்த தீர்ப்பு குறித்து வாய் திறந்திருக்கும் அதிதி “நான் சட்டம் படித்தவள் (அடடா! படிச்ச படிப்பை சொல்லி காண்பிச்சாச்சு), அந்த வகையில் கடந்த வாரத்தில் வெளியான மூன்று முக்கிய தீர்ப்புகளை வரவேற்கிறேன் (ஆஹா, நாட்டு நடப்புகளை கவனிக்கிறேன்னும் பதிய வெச்சாச்சு).

எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் அப்படிங்கிற தீர்ப்பை வரவேற்கிறேன். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு (பெண்ணியம், பெண்ணியம் பேசுறோம்ல!). 
நானும் மூன்று முறை சபரிமலை சென்றுள்ளேன் (ஞானொரு பக்தி மானானு), இந்த தீர்ப்பின் மூலம் மீண்டும் அங்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. (நீதிமன்ற உத்தரவை மதித்து, புரட்சி செய்வோம் பாஸு).

அருவி படம் போல் சமூக விழிப்புணர்வு படங்களில் தொடர்ந்து நடிப்பேன், தேவைப்பட்டால் வழக்கறிஞராகவும் பணியாற்றுவேன்!” என்று பேசியுள்ளார். 

அருவிப் படம் பாராட்டுகளை அள்ளிக்  கொட்டியபோது அதிதியை சுற்றி மீடியா வெளிச்சம் இருந்தது. அதன் பின் பல மாதங்கள் காணாமல் போயிருந்தார். ஆனால் இப்போது சபரிமலை தீர்ப்பை பற்றி கமெண்ட்ஸ்களை தட்டிவிட்டபடி மீண்டும் மீடியா பார்வைக்குள் நுழைந்துவிட்டார் அதிதிபாலன். 

அதேவேளையில் அதிதியின் இந்த கருத்துக்களை ஸ்போட்டீவாக எடுத்துக் கொள்ளாமல், நெகடீவ் ரீதியில் அவர் மீது சிலர் விமர்சனங்களை அள்ளிக் கொட்டியுள்ளனர். சமூக வலைதளங்களில். 
ஆனால் எப்படிப் பார்த்தாலும் இது அதிதிக்கு இலவச விளம்பரம்தான். இந்நிலையில் அருவி இப்படி மீண்டும் கொட்ட துவங்கியிருப்பதை பார்த்து, மேலும் சில ஃபீல்டு அவட் நடிகைகளும் சபரி மலை தீர்ப்பை பற்றி வாலண்டியராக கருத்து கொட்ட துவங்கியுள்ளனர். 
நடத்துங்க! நடத்துங்க!