2017ம் ஆண்டு வெளியான அருவி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அதிதி பாலன். சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த பெண்ணை சமூகம் எப்படி போராளியாக மாற்றுகிறது என்பதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டிய இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. படத்தில் ஹீரோயின் என்ற சாயலே இல்லாமல் பக்கத்து வீட்டு பெண் போல் வந்த அதிதி பாலன் பலரையும் கவர்ந்தார். அருவி படத்தில் அதிதி பாலன் பட்ட கஷ்டங்களைப் பார்த்து, படம் முடிந்த பிறகும் அழுது கொண்டே திரையரங்கில் இருந்து வெளியேறியவர்கள் ஏராளம். அருவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அருண் பிரபுவையும், அதிதி பாலனையும் நேரில் அழைத்து பாராட்டினார். பாராட்டியதோடு மட்டுமல்லாது சிறந்த படைப்பை கொடுத்ததற்காக இருவருக்கும் தங்க சங்கிலியை பரிசாக கொடுத்தார். 

இதையும் படிங்க: துள்ளுவதோ இளமை ஷெரினா இது?... ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அசத்தலான போட்டோ... அழகை வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திண்டாடும் பிக்பாஸ் ஃபேன்ஸ்...!...

அருவி என்ற ஒற்றைப் படத்தின் மூலமாக தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் அதிதி பாலன். ஆனால் அவருக்கும் தற்போது நடிகைகளிடையே புதிதாக பரவி வரும் நோய் தொற்றிக் கொண்டது. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கும் ஹீரோயின்கள் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி, அதனை சோசியல் மீடியாவில் உலவ விடுகின்றனர். இதன் மூலம் ஹீரோயின்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதும் உண்டு. தற்போது அந்த நடிகைகளின் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் அதிதி பாலன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான 6 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற ஸ்லீவ்லஸ் ஜாக்கெட்டுடன், மஞ்சள் நிற புடவை அணிந்து புதுமையான வகையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் அதிதி. அதில் அவர் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ்கள் ஒவ்வொன்றும் செம லைக்குகளை அள்ளி வருகிறது. 

இதையும் படிங்க: என்ன ட்ரை பண்ணாதீங்க... எச்சரிக்கை விடுக்க இப்படியொரு செல்ஃபியா?... இடுப்பழகி நடிகையின் ஹாட் செல்ஃபி...

யாரை கவர அதிதி இந்த புகைப்படங்களை எடுத்தாரோ தெரியவில்லை. ஆனால் அதிதி பாலனின் கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை தான் கொடுத்துள்ளது. உங்கள நான் இதயத்தில வச்சியிருந்தேன் நீங்களா இப்படி. ஏன் இந்த திடீர் கவர்ச்சி. விளம்பரத்திற்காக இப்படி ஏன் பண்றீங்கன்னு அதிதி பாலனை அவரது ரசிகர்கள் சரமாரியான கேள்விகளால் துளைச்சி எடுத்துக்கிட்டு இருக்காங்க. ஒருபுறம் அதிதி பாலனுடைய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை வெற லெவலில் தெறிக்க வைத்துள்ளது.