குறைந்த வயதுள்ள ஆண்களை திருமணம் செய்துகொள்வது, பிரபலங்கள் மத்தியில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தன்னை விட 10 வயது குறைவானவரை, நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை அடுத்து, தன்னை விட 12 வயது இளையவரும் பிரபல தயாரிப்பாளரான போனி கபூரின் மகனுமான அர்ஜூன் கபூரை,  கவர்ச்சி நடிகை மலைக்கா அரோரா திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் ஒரு சில வருடங்களாகவே கூறப்பட்டு வருகிறது.

மலைக்கா அரோரா:

இந்தி நடிகை, மலைக்கா அரோரா இயக்குனர்மணிரத்னத்தின் ’உயிரே’ படத்தில் ’தக்க தைய்ய தைய்யா தைய்யா தைய்யா’பாடலுக்கு கருப்பு உடையில் தோன்றி, கவர்ச்சி நடனம் ஆடியவர் என்று சொல்லேன், நம் கோலிவுட் ரசிகர்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். 

இவர் பாலிவுட் நடிகர் ஹீரோ சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானை காதலித்து 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அர்ஹான் என்ற மகன் இருக்கிறார். நட்சத்திர தம்பதிகளான இவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகன் அர்ஹான் தந்தையுடன் வசித்து வருகிறார். மலைக்கா டிவி நிகழ்ச்சி மற்றும் மாடலாகவும், இந்தி திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.

அர்ஜுன் கபூருடன் காதல்:

இந்நிலையில் மலைக்கா அரோராவும்,  போனிகபூரின் மகனும் பிரபல நடிகருமான அர்ஜுன் கபூருக்கு நட்பு ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் ஒன்றாக பட விழாக்களுக்குச் சென்று வருவது, மற்றும் ஷாப்பிங் செல்லும் போது பத்திரிக்கையாளர்கள் கண்ணில் படவே தொடர்ந்து  கிசுகிசு வெளியானது.

ஆனால் இருவரும் ஆரம்பத்தில் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. சமீபத்தில் தான் இருவரும் தங்களுக்குள் உள்ள உறவு காதல் என உறுதி செய்தனர்.

இதையடுத்து எப்போது இவர்களுடைய திருமணம் என்கிற கேள்வியை ரசிகர்கள் அதிகம் எழுப்பி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அர்ஜுன் கபூர் நேற்று, ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார். அப்போது இவரிடம் ரசிகர் ஒருவர்... மீண்டும் திருமணம் பற்றி கேட்க, "நாங்கள் திருமணம் செய்ய விரும்பினாலும் இப்போது எப்படி செய்துகொள்ள முடியும். திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக ரசிங்கர்களுக்கு சொல்லுவேன். இப்போது எந்த திட்டமும் இல்லை" என்றும் "என்னுடன் வாழ்வது அவ்வளவு எளிமையான விஷயம் இல்லை, அவரின் பொறுமையால் தான் என்னை ஜெயிக்கிறார்" என்று கூறியுள்ளார் அர்ஜுன் கபூர். எனவே விரைவில் இவர்களுடைய திருமணம் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.