நடிகர் அர்ஜுன் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடினார். அவருடைய பிறந்த நாளுக்கு அவரது இரண்டு மகள்களும் யாரும் எதிர்பாராத மிக சிறந்த பரிசை தன் தந்தைக்கு அளித்து உள்ளனர்.
 
அதாவது குஜராத்தில் இருந்து ஸ்பெஷல் பசுவை வரவைத்து அர்ஜுன் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்து உள்ளனர்.பொதுவாகவே பிறந்த நாள் என்றால், யாராக இருந்தாலும் தன்னால் முடிந்த சில கிப்ட்ஸ் வாங்கி  கொடுப்பார்கள் அல்லது சைக்கிள் கார் பைக் என இதில் எதாவது விலை உயர்ந்த பொருளை வாங்கி பரிசாக தருவார்கள்..இது அவரவர் பொருளாதரத்தை பொருத்து மாறுபடும்...ஆனால் அந்த இடத்தில் அன்பு கண்டிப்பாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மிகவும் வித்தியாசமாக அர்ஜூனின் இரண்டு மகள்களும் சேர்ந்து இந்த அரிய கிப்ட்டான கொடுத்து அர்ஜுனை சந்தோஷக மழையில் நனைய வைத்து உள்ளனர்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு தன் மகள் இருவரும் சேர்ந்து  கொடுத்த மிக பெரிய பரிசு இந்த மாடு என கூறி சந்தோஷப்பட்டு உள்ளார். இது குறித்து சமூகவலைத்தளம் வாசிகள் பல்வேறு கருத்துகளை பாதிவிட்டு பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.