கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டவர் ஆரவ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்  பல விளம்பரங்களில் மாடலாகவும், சைத்தான் படத்தில் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்தார். 

இந்நிலையில் இவருடைய வாழ்க்கையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் பல படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் தேடி வந்தது. ஆனால் ஆரவ் மிகவும் நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்  முதல், தற்போது வரை இவர் நடித்த எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில். இவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கெஸ்ட்டாக சென்றுள்ளார். 

இந்நிலையில் இவரின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் ஃபாஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. 

இந்த படத்திற்கு 'ராஜபீமா என பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் யானையுடன் உள்ளார் ஆரவ். தன்னுடைய முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக பல நாள் காத்திருந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டின் உள்ளே சென்றுள்ள போது 'ராஜபீமா' படத்தின் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்வெளியாகியுள்ளது. 

இந்தா சந்தோஷமான தருணத்தை அவர் தன்னுடைய குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள முடியாத சூழல் உள்ளதால் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் கூறப்படுகிறது.