நடிகை அனுஷ்கா 33 வயதை கடந்து விட்டதால், தற்போது இவருக்கு பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். மேலும் இவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்ததால் அதனை சரி செய்வதற்காக சில பூஜைகளும் மேற்க்கொள்ளப்பட்டது. 

அனுஷ்காவும் அதற்கு தகுந்தாப்போல் தற்போது படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்டுள்ளார். 

எனினும் இவர், நடிகர் பிரபாஸ்சுடன் தற்போதும் காதலில் இருப்பதாகவும், பிரபாஸ் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால். இருவருமே திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதற்கு இருவருமே தாங்கள் சிறந்த நண்பர்கள் என்றும் காதலர்கள் இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தனர். இருப்பினும் இவர்களை சுற்றும் வதந்திகள் மட்டும் நின்றபாடில்லை.

இந்நிலையில் தற்போது அனுஷ்கா தீவிர பெட் லவ்வர் ஆகியிருக்கிறார். ஏற்கனவே போமேரியன் வகையை சேர்ந்த நாயை வளர்த்து வந்த இவர் தற்போது மேலும் சில நாய்க்குட்டிகளை வளர்க்க துவங்கியுள்ளாராம். 

படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டிகளுடன் பொழுதை கழிப்பது  இவருடைய புது ஹாபியாக மாறி இருக்கிறது.