2005 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் மொழியில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவர் நடிப்பில் வெளியான அருந்ததி, ருத்திரமா தேவி,  படங்கள் அவரது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த படங்களாக அமைந்தது.

மேலும் பாகுபலி, மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்கள் இவருக்கு நடிப்பின் மீது இருந்த பக்தியை வெளிக்கொண்டு வந்த படங்களாக அமைந்தது.

இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும், ரஜினி, விஜய், அஜித், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவருக்கு தற்போது சொல்லும்படியாக பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் பாகுமதி, இந்த படத்தை தொடர்ந்து இவருடைய பெற்றோர் இவருக்கு தீவிரமாக மாப்பிளை தேடிவந்ததால் இவர் தேடி வந்த படங்களின் வாய்ப்புகளையும் ஏற்கவில்லை. 

இந்நிலையில் இவருடைய புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அனுஷ்கா மிகவும் குண்டாக தெரிகிறார். ஏற்கனவே, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக, இவர் உடல் எடையை ஏற்றினார். அதன் பின் பாகுபலி படத்தின் காட்சிகளில் நடிக்க தீவிரமான உடல் பயிற்சிகள் செய்து குறைத்தார். ஆனால் முழுமையாக உடல் எடையை குறைக்க முடியவில்லை. 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படத்தில், ஸ்லிம் பிட்டாக இருந்த அனுஷ்கா, ஓவர் வெயிட் போட்டு ஆண்ட்டி லுக்கில் தெரிகிறார். 

மேலும் தற்போது இவர், இயக்குனர் பாரதிராஜ இயக்க உள்ள ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடித்தி வருவதாகவும், ஆனால் இவருக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதால், இவர் படங்களில் நடிக்க சற்று தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பாரா? இல்லையா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

 

அந்த புகைப்படம் இதோ...