திரை பிரபலங்கள் சாதாரணமாக செய்யும் சில விஷயங்கள் கூட ரசிகர்கள் மத்தியில், வைரலாக மாறிவிடுவது உண்டு. அதே போல், பிரபலங்கள் பற்றிய அடிக்கடி வதந்திகளும் வருவதுண்டு. இதனை அவர்களே பெரிதாக எடுத்து கொள்ளாவிட்டாலும், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பரவும் விஷயங்களை பெரிய விஷயமாக பார்ப்பார்கள்.

அந்த வகையில், மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தில் நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவர், அனுபமா பரமேஸ்வரன். தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'கொடி' படத்தில் நடித்தார். 

மேலும், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்  இந்திய கிரிக்கெட் டீமில் இருக்கும் வேக பந்து வீச்சாளார்  ஜஸ்பிரித் பும்ராவை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியானது. அனால் இது குறித்து இருவருமே, வாய் திறக்க வில்லை. 

இந்த காதல் கிசுகிசு எப்படி துவங்கியது தெரியுமா? அதாவது பும்ராவை ட்விட்டர் மூலம் 25 பேர், பாலோ செய்து வருகிறார்கள். அவர்களில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். அதே போல் பும்ராவும் அனுபமா பரமேஸ்வரனை ட்விட்டர் கணக்கில் பாலோ செய்து வருகிறார். இதனால் தான் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு எழுந்தது.

ஆனால் அனுபமா கிரிக்கெட் ரசிகை என்பதால் தோனி, அபிஷேக் சர்மா ஆகிய கிரிக்கெட் வீரர்களையும் பின் தொடர்கிறார். ஆனால், பும்ராவுடன் மட்டும் இவரை இணைத்துப் பேசி காதல் வதந்தியை பரப்பி விட்டனர் சிலர்.  உண்மையில் சமூக வலைத்தளத்தில் பாலோ செய்வதையெல்லாம் வைத்து காதல் கதை கட்டுவது கொஞ்சம் ஓவர் தான்.