சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள் பாடியதன் மூலம் பிரபலமடைந்த தம்பதியர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜ லஷ்மி. இந்த தம்பதியரில் செந்தில் கணேஷின் கணீர் குரலும், நாட்டுப்புற பாடலும் தான் இந்த முறை சூப்பர் சிங்கர் பட்டத்தை அவருக்கு சொந்தமாக்கி தந்திருக்கிறது. இதனால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பை பெற்றிருக்கும் இவருக்கு மேலும் பல வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் இருக்கிறது.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனின் சீம ராஜா படத்திற்காக ஒரு பாடல் பாடி இருந்தார் செந்தில் கணேஷ். தற்போது இவர் சூர்யா 37 படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார். அதுவும் ஹீரோ இண்ட்ரொடக்‌ஷன் பாடல். இது குறித்து அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறி இருக்கிறார்.

 

A great thing happened.
Recorded an opening song for KVAnand sir's superb movie with HarrisJayaraj sir 's mesmerizing music n SuperHero Surya sir's play..it was an amazing day..airtel super singer SenthilGanesh's bold voice is blowing in mind.cheers.. pic.twitter.com/tyltyOQtrG

— Gnanakaravel (@gnanakaravel) July 28, 2018

ஹாரிஸ் ஜெயராஜ்-ன் மெய்மறக்க செய்யும் இசையில், இயக்குனர் கே.வி.ஆனந்தின் சூப்பர் திரைப்படத்தில், சூப்பர் ஹீரோ சூர்யாவிற்காக பாடல் எழுதியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பாடலை செந்தில் கணேஷின் கணீர் குரலில் பதிவு செய்து கேட்டது இன்னும் காதுகளில் ஒலித்து கொண்டிருக்கிறது. என தெரிவித்திருக்கிறார்.