வெளியானது 'சக்தி" படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர்...! வரலக்ஷ்மியின் 3 மொழிகளில் உருவாகும் திரைப்படம்(வீடியோ)
நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி ஹை-பை லுக்குடன் சும்மா கம்பீரமாக நடிக்க உள்ள திரைப்படம் சக்தி
இன்று வெளியான சக்தி படத்தின், பஸ்ட்லுக் போஸ்டர் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் வரலக்ஷ்மி
இந்த படத்தை இயக்குபவர், பல வெற்றி படங்களை இயக்கி தனக்குன்னு ஒரு பாணியை வைத்துக்கொண்டு இயக்கத்தில்கலக்கி வரும் இயக்குனர் மிஸ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்ஷினி தான்.
பஸ்ட்லுக் போஸ்டரிலேயே தன் கம்பீர லுக் கொடுத்த வரலக்ஷ்மி ஒரு பக்கம் இருக்க,மற்றொரு புறம்,இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா பிரியதர்ஷினி என்றஆவலும் எழுந்துள்ளது
இந்த படம் முற்றிலும் ஆக்ஷஷன் திரில்லர் ஆக இருக்கும் என தெரிவித்து மேலும் ஆர்வத்தை கூட்டியுள்ளார் பிரியதர்ஷினி
மேலும்,சக்தி படம் மூலமாக தன்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த உள்ள வரலக்ஷிமிக்கு, அவருடைய தந்தையும் நடிகருமான சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கூடவே படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்