’கற்பழிப்பு நடந்தால் அதை ‘அனுபவிக்க’வேண்டியதுதான்’...எம்.பி. மனைவியின் முகநூல் பதிவால் சர்ச்சை...

எர்ணாகுளம் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது குறித்து நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அன்னா லிண்டா ஈடன்,...விதி என்பது கற்பழிப்பு நடப்பதை போன்றது. அதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால் அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான்’என்று விபரீதமாய் ஜோக் அடித்திருந்தார். அப்பதிவில் அவரது கணவர் ஹாயாக ஐஸ் கிரீம் சாப்பிடும் படமும் இணைக்கப்பட்டிருந்தது.

Anna Linda Eden, wife of Ernakulam Member of Parliament Hibi Eden, has expressed regret for a Facebook post

எர்ணாகுளத்தின் வெள்ள நிலைமை குறித்து திங்கள்கிழமை இரவு தனது முகநூல் பதிவில் மிக மட்டமான ரசனையுடன் போட்ட பதிவுக்கு எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடனின் மனைவி அன்னா லிண்டா ஈடன் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பொதுமக்கள் கொஞ்சமும் அசராமல் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.Anna Linda Eden, wife of Ernakulam Member of Parliament Hibi Eden, has expressed regret for a Facebook post

எர்ணாகுளம் முழுக்க வெள்ளம் சூழ்ந்துள்ளது குறித்து நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அன்னா லிண்டா ஈடன்,...விதி என்பது கற்பழிப்பு நடப்பதை போன்றது. அதை எதிர்த்துப் போராட முடியாவிட்டால் அதை அனுபவிக்க ஆரம்பித்துவிட வேண்டியதுதான்’என்று விபரீதமாய் ஜோக் அடித்திருந்தார். அப்பதிவில் அவரது கணவர் ஹாயாக ஐஸ் கிரீம் சாப்பிடும் படமும் இணைக்கப்பட்டிருந்தது.

அந்த அசட்டுத்தனமான பதிவைக்கண்டு கொந்தளித்த பொதுமக்கள் அவரைக் காய்ச்சி எடுக்க ஆரம்பித்தனர். "கற்பழிப்பு மற்றும் வெள்ளம் ஆகியவை விதி அல்ல. ஒன்று ஆண் ஆதிக்கம் காரணமாகவும், மற்றொன்று பொறுப்பற்ற ஆட்சியால் நடைபெறுவது. இரண்டையும் ஒப்பிட்டு கொண்டாட, ஒருவருக்கு அசாதரணமான மனநிலை வேண்டும். அதனால்தான் இது நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தபோதும் 'மேன் ஜோக்' உங்களிடமிருந்து வருகிறது. "என்றும் ‘உங்களுடைய சிந்தனை அருவெறுப்பாக இருக்கிறது என்றும் பயங்கர எதிர்ப்புகள் கிளம்பின.Anna Linda Eden, wife of Ernakulam Member of Parliament Hibi Eden, has expressed regret for a Facebook post

அந்த எதிர்ப்புகளுக்கு பயந்து பதிவை நீக்கிய அன்னா லிண்டா ஈடன், தனது செயலுக்கு மிகவும் வருந்துவதாகவும் சில சோகமான சம்பவங்களை நகைச்சுவையால் கடந்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே அப்பதிவு போடப்பட்டதாகவும், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios