நடிகை அஞ்சலி நடிப்பில், சமீபத்தில் வெளியான 'நாடோடிகள் 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு, அஞ்சலியின் நடிப்பிற்கும் நல்ல கருத்துக்கள் கிடைத்தன. 

இந்நிலையில் தற்போது அஞ்சலி பிரபல தெலுங்கு நடிகர், பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை போயபட்டி ஸ்ரீனு இயக்குகிறார்.

ஏற்கனவே இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட சில நடிகைகளிடம் பேச்சு வார்தை நடத்திய நிலையில், அவர்கள் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க கால் சீட் இல்லை என கூறியதாக தெரிகிறது.

எனவே படக்குழுவினர் அஞ்சலியிடம் இந்த கதையை கூற, அவர் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஓகே சொல்லியுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.