நடிகை எமி ஜாக்சன், திடீர் என தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் மருத்துவர் ஸ்கேன் செய்யும் வீடியோவை வெளியிட்டு தன்னுடைய 23 மாத குழந்தையை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

லண்டனில் இருந்து பறந்து வந்து, சென்னையின் பாரம்பரியத்தை எடுத்து கூறும் வகையில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' படத்தில் நடித்தவர் எமி ஜாக்சன்.

இந்த படத்தை தொடர்ந்து, விக்ரம், தனுஷ், விஜய், ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்கள் படத்தில் மட்டுமே நடித்து வந்தார். மேலும் ஹாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

அமெரிக்காவை சேர்ந்த, பிரபல தொழிலதிபரை ஜனவரி 1 ஆம் தேதி காதலித்து வருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தார். இதை அறிவித்த சில நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த தகவல் இரண்டு மாதங்களுக்கு பின்பு தான் தெரியவந்ததாகவும் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் 23 வாரங்கள் உள்ள தன்னுடைய குழந்தையை மருத்துவர்  ஸ்கேன் செய்யும் வீடியோ ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார் எமி. இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@iamamyjackson #amyjackson

A post shared by Entertainment Fan Page (@facc2911) on May 29, 2019 at 12:47pm PDT