இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லண்டன் பொண்ணு எமிஜாக்சனுக்கு, இந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுக்கடுக்காக விஜய், ரஜினி, விக்ரம், தனுஷ், என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

தமிழ் மொழி மட்டும் இன்றி, தெலுங்கு, ஹிந்தி என படிப்படியாக உயர்ந்து தற்போது, ஹாலிவுட் வரை சென்று விட்டார் எமி. இவர் ஹாலிவுட்டில் நடித்து வரும் சூப்பர் கேர்ல் சீரிசுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்ப்பு உள்ளது.

இந்நிலையில் எமி தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் ‘இனி மொராக்கோவில் இருந்து நான் திரும்பமாட்டேன்' என கூறி' பை என கூறியுள்ளார்.

எமிஜாக்சன் தற்போது வடக்கு ஆப்ரிக்க நாடான மொராக்கோவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே உள்ள அழகிய காட்சிகளைக் கண்ட அவர் அங்கேயே செட்டில் ஆக முடிவெடுத்து விட்டாராம். இது தொடர்பாக ஒரு சிறு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் எமி வெளியிட்டுள்ளார். அதில் ‘ நான் மொராக்கோவிற்கு குடியேற விரும்புகிறேன், இங்கு இருந்து வர மனம் இல்லாததால் இனிமேல் திரும்ப போவதில்லை..பை’ என்று கூறியிருக்கிறார். இவரின் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இவர், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே பல முறை அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த படத்தில் கிராப்பிக் பணிகள் இன்னும் முடிவடையாததால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. 

அந்தப் படத்திற்கு பிறகு எமி எந்த தமிழ் திரைப்படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.