’2.0’ விஜயசாந்தியை காலி பண்ணும் எமி ஜாக்ஷனின் சாகஸ வீடியோ...நிஜமாவே மிரட்டுறாருங்க...
நடிகைகளிலேயே சண்டைக் காட்சிகளில் மிரட்டுபவர் என்றால் அது எப்போதும் விஜயசாந்திதான். அந்த வீர சாந்திக்கே சவால் விடும் ‘2.0’ பட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை எமி ஜாக்ஷன்.

“2.0 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, சிறந்த சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் சென்னைக்கு வந்து சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சி தந்தனர். எங்கள் முதல் பயிற்சியின்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. எனது தவறுகள் என்னென்ன என்பதைப் பார்த்து திருத்திக் கொள்ள ஸ்லோமோஷனில் படம்பிடித்தோம்” எனத் தெரிவித்துள்ளார் எமி ஜாக்சன்.