தான் முழு நிர்வாணமாக நடித்திருந்த ‘ஆடை’படம் சோடை போனதால் அடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் வாழ்க்கையே வெறுத்துப் போயிருந்த நடிகை அமலா பால் வேறு வழியின்றி தெலுங்கு செக்ஸ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

காமத்தின் மீது பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சியை சொல்லும் படமாக அமைந்த ’லஸ்ட் ஸ்டோரிஸ்’.வெப்சீரிஸ்  நெட்பிளிக்ஸ் ஸ்டீரிமிங் தளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே சமயம் அதிகமான ரசிகர்களால் ஜொள்ளுவிடப்பட்ட  படம் என்ற பெருமையையும் பெற்றது.  நான்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட இந்த தொடரை இயக்குநர்கள் கரண் ஜோகர், அனுராக் காஷ்யப், திபகர் பேனர்ஜி, ஸோயா அக்தர் ஆகியோர் இயக்கியிருந்தனர். இத்தொடரில் முன்னணி நடிகைகளான  கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலர் துணிந்து நடித்திருந்தனர்.

இந்நிலையில் நான்கு வெவ்வேறு கதையம்சம் கொண்ட இந்த தொடர் தற்போது தெலுங்கில் படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை நந்தினி ரெட்டி  இயக்குகிறார். இதில் ஒரு கதைக்கான பாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். லஸ்ட் ஸ்டோரிஸ் வெப்சீரிஸில் பெற்றோர் கண்முன்னே சுய இன்பம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

இதற்கு முன்பு தமிழில் சாமி இயக்கத்தில் மாமனாரை விரட்டி விரட்டி செக்ஸ் வைத்துக்கொள்பவராக ‘சிந்து சமவெளி’என்ற படத்தில் அனகா என்ற பெயரில் இதே அமலாபால் தனது திறமையைக் காட்டியிருந்தார் என்பதை தமிழ் சமூகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்காது.