தனது இனிமையான குணத்தால் மிகக் கடினமான சூழலையும் இலகுவாக்கினார் இயக்குநர் நந்தினி ரெட்டி என்று தனது செக்ஸ் பட அனுபவம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அமலா பால். ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’என்ற பெயரில் இந்தியில் எடுக்கப்பட்ட செக்ஸ் கதைகளின் தெலுங்கு ரீமேக்கில் அமலாபால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆடைபட ரிலீஸுக்குப் பின் கைவசம் சுத்தமாக படங்கள் இல்லாமல் இருந்த நடிகை அமலா பால் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அரைகுறை ஆடையில் தொடர்ந்து படங்கள் வெளியிட்டு வாய்ப்பு தேடி வந்தார். தமிழ்ப்பட இயக்குநர்கள் யாரும் அவருக்கு வாய்ப்புகள் வழங்க முன்வராத நிலையில் அவருக்கு வந்த ஒரே வாய்ப்பு இந்தியில் பெரும் சர்ச்சைகளை உண்டாக்கிய செக்ஸ் வெப் தொடரான ‘லஸ்ட் ஸ்டோடிஸ்’மட்டுமே. அதிலும் நான்கு கதைகளில் ஒன்றில் மட்டுமே இவர் ஒப்பந்தமானார்.

அந்த சீரிஸின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றிருந்த அமலாபால் 10 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,..."தருணங்கள் பிறக்கும், மறையும். ஒரு புதிய அனுபவத்துக்காக, சில பழைய அனுபவங்களை தொலைக்க வேண்டும். தெலுங்கு ஆந்தாலஜி படப்பிடிப்பு முடிந்தது. இப்போது அந்த கதையை எனது தலையில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும். கடந்த 10 நாட்களாக உண்மையில் ஒரு கடுமையான பயணம். ஆனால் அதை மிகவும் எளிதானதாகவும், அற்புதமானதாகவும் மாற்றிவிட்டார் இயக்குனர் நந்தினி. அப்படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்’என்று பதிவிட்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் 10 நாட்கள் பிசியாக இருந்ததால் ட்விட்டரில் பதிவுகள் போட்டு தொல்லை தராமல் இருந்த அமலா அடுத்த பட வாய்ப்பு வரும் வரை தனது கிளாமர் படங்களைப் போட்டு அட்ராசிட்டிகளைத் தொடருவார் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.