அமலாபால் நடித்த ஆடை படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நீங்க இதற்கு செக்ஸ் படமே எடுத்திருக்கலாம், இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு உங்களுக்கு U அல்லது  U/A  சான்றிதழ் வேண்டுமா? என படக்குழுவை காய்ச்சி எடுத்ததாம்.

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் ஹாட் நடிகை அவதாரம் எடுத்திருந்த அமலாபால், மைனாவுக்கு பிறகு விஜய்,சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையானார். தனது திருமணவாழ்க்கையை வெறுத்து ஒதுக்கிவிட்டு மீண்டும் நடிக்க வந்த அமலாபாலுக்கு  படங்கள் குவியத் தொடங்கியது. கடந்த வருடம்  வெளியான ராட்சசன் நல்ல வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். 

ஆடை படத்தில் அறைகுறை நிர்வாணமாக இருப்பது போல ஃ பஸ்ட் லுக்  போட்டோக்கள் ஏற்கனவே வெளியானது. தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக காட்டாத அளவிற்கு படு செக்ஸி லுக்கில் கிறங்கடித்தார். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு அரை நிர்வாண தோற்றத்தில் ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் வெடித்தது. 

இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார். தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். U அல்லது  U/A   சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். 

ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நீங்க இதற்கு செக்ஸ் படமே எடுத்திருக்கலாம், இப்படி ஒரு படத்தை எடுத்துவிட்டு உங்களுக்கு U அல்லது  U/A  சான்றிதழ் வேண்டுமா? எனக் காட்டமாக கேள்விகேட்டார்களாம்.யூ அல்லது யூஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். வேண்டுமென்றால் A சான்றிதழ் கொடுக்கிறோம் என தெளிவாக சொல்லிவிட்டார்களாம்.