கேரளாவிலில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதியான நடிகைகளில் செம்ம வித்தியாசமானவர் அமலா பால். காரணம், கொஞ்சம் ‘அந்த மாதிரி’ படங்களில் கமிட் ஆகி இன்டஸ்ட்ரிக்குள்  நுழைந்தவர், மைனா மூலம் வேறு பரிமாணத்தைப் பெற்றார். இயக்குநர் ஏ.எல்.விஜய்யோ அவரை தன் ‘தெய்வதிருமகள்’ மூலம் அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றார். அத்தோடு விட்டாரா, இளைய தளபதி விஜய்யோடு நடிக்க வைத்து அவருடைய ரேஞ்சையே எங்கோ கொண்டு சென்றார். 

இதன் பின் இயக்குநர் விஜய்க்கும், அமலாவுக்கும் இடையில் காதல் கெமிஸ்ட்ரி கன்னாபின்னாவென பற்றியது. ஏ.எல்.விஜய்யின் பெற்றோருக்கு இந்த காதல் பிடிக்கவில்லை. காரணம், அமலா கிறுத்துவ பெண் என்பது உள்ளிட்ட பல காரணங்கள். ஆனாலும் விஜய் அமலாதான் வேண்டுமென்று ஒற்றைக் காலில் நிற்க சுபமாக நடந்தேறியது திருமணம். அமலா-விஜய்யின் ஹனிமூன் ஹாட்டஸ்ட் போட்டோக்கள் தமிழ் மற்றும் மலையாள பத்திரிக்கைகளின் அட்டைப்படங்களாகின. இப்படியாக ஊர் கண் பட சுற்றி வந்த இந்த ஜோடி திடீரென விரிசல் கண்டு டைவர்ஸ் செய்து கொண்டது.

 

இவர்களின் மண வாழ்வில் விரிசல் விழ காரணமே இவர்தான் என்று உச்ச இடத்து மாப்பிள்ளை ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டார். அமலாவும் அவருடன் இரண்டு படங்கள் நடித்தார். அதன் பிறகு அமலா பாலின் போக்கில் பெரிய கெத்து ஏற்பட துவங்கியது. விதவிதமான கிளாமரில் தன்னை புகைப்படம் எடுத்து சோஸியல் மீடியாவை தெறிக்க விடுவது, சர்ச்சை விஷயங்களில் கருத்தை போட்டுத் தாக்குவது என்று தன்னை புதிய கோணங்களில் வெளிப்படுத்த துவங்கினார்.  

இந்நிலையில் சமீபத்தில் ‘ஆடை’ எனும் படத்தில் கமிட் ஆகி அதன் ஷூட் போய்க் கொண்டிருக்கிறது அமலாபாலுக்கு. ஹிட் படமான மேயாத மான் படத்தின் இயக்குநர்தான் இதையும் இயக்குகிறார். இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ஆடை எனும் டைட்டில் உடைய இந்த படத்தின் ஸ்டில்லில் முக்கால்வாசி உடம்புக்கு ஆடையே இல்லாமல் உட்கார்ந்திருக்கிறார் அமலா. அதிலும் கிட்டத்தட்ட 70% அளவுக்கு அவரது மார்புகள் வெளியே தெரிவதுதான் உச்சபட்சம். பர்ஸ்ட் லுக்கில் இருப்பது வெறும் டிரெய்லர்தான் படத்தில் அமலாவின் கவர்ச்சி உச்சம் தொடும்! என்று ஆடை க்ரூ அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் அமலாபால் இந்தளவுக்கு இறங்கி கவர்ச்சி காட்ட வேண்டியதன் அவசியமென்ன? நீங்கள் அவருக்கு புத்தி சொல்லக்கூடாதா? மீண்டு அவர் பழைய பாதைக்கே போய்கிறாரா? என்றெல்லாம் சிலர் ஏ.எல்.விஜயிடம் பொங்கியிருக்கிறார்கள். அவரோ கடும் டென்ஷனாகி, ‘அவருக்கும் எனக்கும் இப்போ என்ன சம்பந்தம்? டைவர்ஸான பொண்ணு எப்படி முடிவெடுத்தா எனக்கென்ன? நான் எப்படி அவங்க சுதந்திரத்துல தலையிட முடியும்?’ என்று கடுப்பேறி கத்திவிட்டாராம். 

இதுமட்டுமில்லாமல் தன் பெற்றோரிடம் சொல்லி அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு பொண்ணை தனக்கு பார்க்க சொல்லியும் விட்டாராம். கூடியவிரைவில் விஜய்க்கு திருமணம் என்கிறார்கள். இந்நிலையில், அமலாபால் இப்படி அரைகுறையாக நடிப்பதே சொஸைட்டியில் ஏ.எல்.விஜய்யை சங்கடத்தில் நெளியவைத்து, அவரது பிரஷரை ஏற்றுவதற்காகத்தான்! விஜய்யை இன்னும் அதிகமாக கடுப்பேற்றவும், நெளிய வைக்கவும் அமலாபாலிடம் கைவசம் நிறைய அதிரடிகள் உள்ளன. அவை அடுத்தடுத்து வெளியே வரும்! என்கிறார்கள் விபரமறிந்தோர்.