தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த ஆண்டு தீபாவளிக்கு கோலாகலமாக ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கான டப்பிங் வேலைகள் தற்போது போய்க்கொண்டிருக்கின்றன. 

சர்கார் படத்தில் விஜய் ஒரு கலக்கலான ரோலில் நடித்திருப்பதாலும், அரசியல் சார்ந்த படம் இது என்பதாலும் சர்கார் மீது விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


இந்த படத்தில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

இந்த படத்திற்கான வேலைகள் முடிவடைந்த பிறகு விஜய் அடுத்ததாக அட்லீ படத்தில் தான் நடிக்கப்போகிறார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தன.
 ஏற்கனவே மெர்சலில் இவர்கள் கூட்டணி ஹிட் அடித்த காரணத்தால் மீண்டும் இந்த கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. தற்போது இணைந்திருக்கும் ஏ.ஆர். ,முருகதாஸ் விஜய் கூட்டணியும் கூட ஒரு வெற்றி கூட்டணி தான். 

கத்தி துப்பாக்கி போன்ற ஹிட் படங்கள் இவர்கள் கொடுத்தது தான்.  இதில் துப்பாக்கி படத்தின் பிரமோஷன் வேலைகள் நடைபெற்ற சமயத்தில் ஒரு நகைச்சுவையான சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் அப்போது விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு ரசிகரிடம் இருந்து ஒரு கால் வந்திருக்கிறது. அதில் பேசிய ரசிகர் விஜயிடம் உங்கள் மகன் எந்த நடிகருக்கு ரசிகர் என கேட்டிருக்கிறார். 

அதற்கு பதிலளித்த விஜய் என் மகன் நடிகர் ஜீவாவின் ரசிகன் என கூறி இருக்கிறார்.
அதை கேட்டதும் அந்த ரசிகர் நானும் ஜீவா ரசிகன் தான் என கூறி இருக்கிறார். அப்போது தான் விஜய்க்கே நடந்தது என்ன என புரிய தொடங்கி இருக்கிறது. ஃபோனில் ரசிகர் என கால் செய்ததே நடிகர் ஜீவா தான் என அறிந்த விஜய் என்னையே கலாய்ச்சுடீங்களா என சிரித்து கொண்டே கேட்டிருக்கிறார்.