அல்லு அர்ஜுன்:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், நடிகர் அல்லு அர்ஜுனின் 37 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஸ்டைலிஷ் ஸ்டாரின் மாற்றம்:

இதுவரை தெலுங்கு ரசிகர்கள் பார்த்திராத வகையில், இந்த படத்தில் தோன்றியுள்ளார் அல்லு அர்ஜுன்.  லாரி டிரைவராக நடிப்பதற்காக, அவர் மிகவும் மெனக்கெட்டிருப்பது அவருடைய தோற்றத்தில் இருந்தே தெரிகிறது.

பரட்டை முடி, முகம் நிறைய தாடி... கருமையான நிறம் என ஒட்டுமொத்தமாக அடையாளம் தெரியாமல் மாறி, அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

ஸ்மால் டவுட்:

இந்த படத்தில்.. அல்லு அர்ஜுன் லாரி ஒட்டுரனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டாலும், தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், அவர் பின்னால் பல செம்மர கட்டைகள் அடுக்கப்பட்டுட்டள்ளது. எனவே மரம் கடத்தும் நபராக நடிக்கிறாரோ என்கிற ஒரு சந்தேகத்தையும் இந்த போஸ்டர் வெளிப்படுத்தியுள்ளது.

படக்குழு:

இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில், ராஷ்மிகா மந்தனா புஷ்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். போலிஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.