ஒரு காலத்தில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் உச்சத்தில் இருந்தவர் நடிகை ஷகிலா. இவர் திரைப்படம் வந்தால், வசூல் குறைத்துவிடும் என எண்ணி, மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் பலர் தங்களுடைய படத்தில், ரிலீஸ் தேதியை தள்ளி வைத்த காலமும் உண்டு.

ஒரு சில பிரச்சனைகள் காரணமாக, கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாள திரையுலகில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களின் முன் பணத்தை கூட திருப்பி கொடுத்து, இனி மலையாளத்தில் படங்கள் நடிக்க மாட்டேன் என கூறினார் ஷகிலா.

தமிழில் குணச்சித்திர வேடத்தில் சில படங்கள் மட்டுமே நடித்த இவர், தற்போது சரியான படவாய்ப்புகள் இல்லாமல் உள்ளார்.

மேலும் தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு, இளையதள ஊடங்கங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில்... இவர் தெலுங்கில் ஒரு தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டி ஒன்றில், பிரபல முன்னணி நடிகர் யார் என்றே தெரியாது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நடிகர் மகேஷ்பாபுவை தனது சகோதரர் போன்றவர் என்றும் ஜூனியர் என்டிஆர் நன்றாக நடனம் ஆடுபவர் என்றும் கூறியுள்ள இவருக்கு அல்லு அர்ஜூனை எப்படி தெரியாமல் போகும் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

இது தான் நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களின் கோபத்திற்கு காரணம். குறிப்பிட்ட அந்த பேட்டியின் வீடியோவை வெளியிட்டு தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.