வெள்ளித்திரை நடிகர்களுக்கு இருப்பது போலவே சின்னதிரை நடிகர்களுக்கும் தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனால் சின்னத்திரையில் கால் பதித்து வெற்றியடைந்த பின்னர், வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகின்றனர் சீரியல் நடிகர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் பிரபலமான சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர் போன்ற நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். இவர்களுக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகிக்கொண்டே போகிறது.

இப்படி பல பிரபலங்களை உருவாக்கிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' சீரியலில் நடிக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி இணைந்து 'என்னை மாற்றும் காதலே' என்கிற படத்தில் நடிக்க உள்ளனர். 

நடிகர் சஞ்சீவ் ஏற்க்கனவே குளிர் 100 டிகிரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்க வில்லை. 

ஆனால் இந்த திரைப்படம் இருவருக்கும் மிகபெரிய திருப்பு முனையாக இருக்கும் என நம்புவதாக கூறியுள்ளனர். சின்னத்திரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவர்கள் வெள்ளித்திரை ரசிகர்கள் மனதிலும் இடம் பிடிப்பார்களா? என பொறுத்திருந்து பாப்போம்.