தமிழ் சினிமாவில் பல நட்சத்திர தம்பதிகள் இருந்தாலும், ரசிகர்கள் பலரும் விரும்புவது  அஜித், ஷாலினி ஜோடியை தான். 'அமர்க்களம்' படத்தில் ஆரம்பமான இவர்களுடைய காதல், இன்று வரை திரைத்துறையில் உள்ள, பல நட்சத்திர ஜோடிகளுக்கு எடுத்துக்காட்டு என கூறலாம்.

அஜித்துக்கு எப்படி கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே போல், அவருடைய மனைவி ஷாலினி நடிப்பிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறு வயதில் கியூட் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், பின் கதாநாயகியாக மாறினார். பின் அஜித்துடன் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. 

இவர்களின் காதலுக்கு சான்றாக அஜித்ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. இருப்பினும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளிலும், தனது கணவருடனும் வெளியே செல்லும் போதும், பிள்ளைகளின் பள்ளி விழாக்களில் கலந்து கொள்ளும் போது மட்டும் இவரை காண முடியும்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஷாலினி தனது சொந்தங்களுடன் எடுத்துக் கொண்ட குரூப் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் ஷாலினியை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஷாக் ஆகியுள்ளனர். அந்த புகைப்படத்தில் இதுவரை இல்லாத அளவு நடிகை ஷாலினி உடல் எடை கூடி மிகவும் குண்டாக மாறியுள்ளார். இதை பார்த்த பலரின் மைன்ட் வாய்ஸ் எப்படி இருந்த ஷாலினி இப்படி ஆகிட்டாரே என்பதாக தான் இருக்கும் என கூறலாம். 

அந்த புகைப்படம் இதோ: