அஜித்தை பற்றி வெளிவந்த "ரகசிய வார்த்தை"..!

நடிகர் அஜித்தை பார்த்து பிரகாஷ்ராஜ் "ஒரு நாள் நீங்க மிக பெரியஆளாக வருவீங்க என்று, "ஆசை" படபடப்பிடிப்பின் போது தெரிவித்தாராம்.

தமிழ் சினிமாவில், பொதுவாகவே ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்களுடைய ரடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள்...இன்னும் சொல்லப்போனால், விஜய் ரசிகர்களுக்கு விஜய் பிடிக்கும், தனுஷ் ரசிகர்களுக்கு தனுஷ் பிடிக்கும். ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும்பிடித்த ஒரு நபர் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் அஜித் தான்.

இன்று அஜித் பற்றி ஆஹா ஓஹா என புகழ்ந்தாலும்,அவரை கண்டுக்கொள்ளாத சில தருணங்கள் இருக்க தான் செய்கிறது.அஜித் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் 26 ஆம் ஆண்டை கடக்கிறார். இந்நிலையில் அஜித் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அதில், குறிப்பாக அஜித்தின் ஆசை படத்தின் போது, நடிகர் பிரகாஷ் ராஜை பார்த்து , "சார் என்னை மக்களுக்கு பிடிக்குமா...? என கேட்டுஉள்ளார். அதற்கு பதில் அளித்த பிரகாஷ் ராஜ், "ஒரு நாள் நீங்க பெரிய ஆளாக வருவீங்க" என்று தெரிவித்து உள்ளாராம்.

இதே போன்று இன்னொரு சம்பவம் நடந்து உள்ளது. கல்லூரி வாசல்படத்தின் போது நடிகர் பிரஷாந்தைபார்க்கஏராளமான ரசிகர்கள் வருவார்களாம்.ஆனால் அஜித்தை பார்க்க யாரும் கண்டுக்கமாட்டார்களாம்.

இதே போன்று, கடை திறப்புவிழா ஒன்றிற்கு அஜித்தையும் பிரஷாந்தையும் அழைத்து உள்ளார்கள். அப்போதுஅஜித்தை ஒரு ஓரமாகநிற்க வைத்து பிரஷாந்தை மட்டும் அழைத்துகடை திறக்கவைத்து உள்ள சம்பவம் நடந்து உள்ளது. அப்போது நடிகர் அஜித்வேதனை அடைந்து, என்றாவது ஒருநாள் இப்படிப்பட்டகூட்டம்எனக்கும் வரும் எனநம்பிக்கையோடுபயணித்து உள்ளார்.

அன்று அப்படிஇருந்த அஜித், இன்று புகழின் உச்சிக்கு சென்றுஉள்ளார். எத்தனை நிகழ்வுக்கு அவரை அழைத்தாலும்அவர் வெளியே வருவது அரிதினும்அரிது. இதுதான் வாழ்கையில் நாம் அடையும் வெற்றியின் ரகசியம் என்றே கூறலாம்.

இன்று நாம் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம், ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக வாழ்வில் மேன்மை அடைவோம் என்ற நம்பிக்கைக்கு உதாரணமாக இந்த சம்பவத்தை கூட எடுத்துக்கொள்ளலாம்.