ரஜினியின் இத்தனை ஆண்டு கால ‘வசூல் மன்னன்! அகில இந்திய சூப்பர் ஸ்டார்!’ பட்டங்களை ஒரே படத்தில் அடித்து நொறுக்கி, வசூலிலும், மாஸிலும் அள்ளு அள்ளென அள்ளிய ‘விஸ்வாசம்’ படமானது அஜித்தை எங்கேயோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. 

இந்த சூட்டோடு அடுத்தும் ஒரு மரணமாஸ் ஹிட் கொடுப்பார் என்று நினைத்தால் ’நேர்கொண்ட பார்வை’ என்று கதையம்சமுள்ள ரீமேக்கினுள் நுழைந்துவிட்டார் அஜித். இந்தப் படம் அவருக்கு பெரிய மாஸ் அந்தஸ்தையும், பெரும் சம்பளத்தையும் கொண்டு வந்து கொட்டும் என்று சொல்வதற்கில்லை. ஆனால், எப்படி விஸ்வாசத்தில் மசாலாத்தனத்தோடு ‘பெண் பிள்ளைகள் பாதுகாப்பு’ பற்றி பேசினாரோ அதேபோல் இதில் அடக்கமாக ஆனால் அழுத்தமாக ‘இளம் பெண்கள் பாதுகாப்பு’ பற்றி பேசுவார் என தெரிகிறது. 

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரே தொடர்ந்து அஜித்தின் அடுத்த மூன்று படங்களை தயாரிப்பதாக இருந்தது. இந்நிலையில், இடையில் வேறொரு தயாரிப்பாளரின் படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் அஜித். இதில் இவரது சம்பளம் மட்டும் 60 கோடியாம். அஜித் கேட்டதும், தயங்காமல் ஓ.கே. சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர். காரணம், எல்லாம் விஸ்வாசத்தின் தாறுமாறு வசூல் எஃபெக்ட்தானாம். 

‘அஜித் சம்பளம் அறுபது கோடியா?என்று வாய் பிளக்கும் தயாரிப்பாளர்களுக்கு, தல சொல்லும் ஒன்லைன் நியாயம் ‘கெத்து இருக்கிற நாம நல்லா இருக்கணும்னா 60 கோடி கேக்குறது தப்பே இல்லை.’ 
சர்தான் தல!