தல அஜித் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'. பாலிவுட் திரையுலகில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  

இந்த படத்தில் நடிகர் அமிதாபச்சன் நடித்த, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.  மேலும் ஷராதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், பிரகாஷ்ராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். கோகுல் சந்திரன் படத்தொகுப்பில், இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படம் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என வெளியாகியுள்ள தகவல், அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.