நாளுக்கு நாள், திரையுலகை சேர்ந்த நடிகர்கள், மற்றும் இயக்குனர்கள் சிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது அஜித்தின் ஆரம்ப காலத்தில் படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தவர் இயக்குனர் சி. சிவகுமார். இவர் அஜித் தன்னுடைய ஆரம்பகாலத்தில் நடித்த 'ரெட்டை ஜடை வயசு' படத்தினை இயக்கியவர். 

மேலும், ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த 'ஆயுத பூஜை' திரைப்படத்தின் இயக்குனரும் இவர் தான். அதன் பிறகு நீண்ட காலமாக இயக்குனர் சிவகுமார் படங்களை இயக்கவில்லை.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து அழுகிய நிலையில் இவருடைய உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து தீவீர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. தற்போது இவருடைய உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. போலீஸ் விசாரணையின் முடிவில் இறப்பிற்க்கான காரணம் குறித்து தெரியவரலாம்.

மேலும் இவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.