தல அஜித் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட, நேர்கொண்ட பார்வை படத்தில், அமிதாபச்சன் நடித்த வழக்கறிஞர் வேடத்தில் நடித்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து, 'நேர்கொண்ட பார்வை' படத்தை இயக்கிய இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் 'நேர்கொண்ட பார்வை' படத்திற்கு பின் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அஜித்துக்கு ஜோடியாக 'காலா' படத்தில் நடித்த ஹீமோகுரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், அஜித்தின் பைக் ரேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அஜித் கீழே விழுந்ததில், அவருக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாகவும், அதனால் படப்பிடிப்பு எந்த ஒரு தடையும் இன்றி நடைபெறும் என்றும் நம்ப தகுந்த வட்டங்கள் கூறுகிறது. எனினும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'வலிமை' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, மார்ச் முதல்வாரத்தில் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில்  துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.