காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கலைஞர் கருணாநிதியை சற்று முன் சந்தித்தார் நடிகர் அஜித்.

கலைஞர் கருணாநிதி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், நாள் தோறும்  ஏராளமான கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சென்று அவருடைய குடும்பத்தினரை சந்தித்து திமுக தலைவர் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை நடிகர் விஜய், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தார். இதைதொடர்ந்து  தற்போது நடிகர் அஜித் திமுக தலைவரை சந்தித்துள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினிடம் அஜித், கருணாநிதியின் உடம் நலம் குறித்து விசாரித்துள்ளார். இந்த சந்திப்பின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருக்கிறார். 

இன்று காலை நடிகர் விஜய், பார்த்து விட்டு செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் போன நிலையில். அஜித் திமுக தலைவர் குறித்து ஏதேனும் பேசுவாரா..? இல்லை எப்போதும் போல் எதுவும் பேசாமல் செல்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.