தமிழ் சினிமாவில் மிகபெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவரின் ரசிகர்கள் பலம் இவருடைய திரைப்படம் பற்றி ஏதேனும் தகவல் வெளிவரும் போது தான் தெரியும். அதிலும் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால் சொல்லவே வேண்டாம்... அன்று அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி தான். ஆட்டம் பாட்டம் , கொண்டாட்டம் என திரையரங்கங்கள் கலை கட்டிவிடும்.

அஜித் பலருக்கு உதவிகள் செய்திருக்கிறார் என கேள்வி பட்டிருப்போம், ஆனால் அஜித் தான் செய்த உதவியை மற்றவர்களுக்கு தெரிய படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுப்பதாலோ என்னவோ இதனை உதவி பெற்றவர்கள் யாரும் அதனை வெளியே சொன்னது இல்லை.

இந்நிலையில், 70 வயது தக்க அஜித் ரசிகர் ஒருவர், தன்னுடைய தல எப்படி தெரியுமா என, சீறிக்கொண்டு பேசியுள்ளது பார்ப்பவர்கள் அனைவரயும் ஆச்சர்யப்படுதியுள்ளது. இந்த வீடியோவில் அவர் "இதுவரை நான் ஏழைகளுக்கு சோறு போட்டவர்களை தான் பார்த்திருக்கிறேன், ஆனால் சோறு போட்டு... வேலை கொடுத்து... வீடும் கட்டி கொடுத்திருக்கிற ஒரே தெய்வம் அஜித் என, "வாலி' அஜித் ஸ்டைலில் டொக் டொக் போட்டு அஜித் என கூறியுள்ளார்.

தான் செத்தாலும், ஏழைகள் சாகக்கூடாது என நினைப்பவர் அஜித் என்றும், "விவேகம் படத்தில், துப்பாக்கியை வைத்து கொண்டு வரேம்மா... வந்துட்டம்மா... என கூறும் டயலாக் பேசியுள்ளார். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து ஒரு மோட்டார் கம்பெனியில் மேனாஜரா வேலை பார்த்து வந்தவர் அஜித் குமார் என அவர் கூறியுள்ள ஸ்டைலே தனி . பின் நண்பா நீ மத்தவங்கிட்ட போன டீ ,காபி, தான் கொடுப்பான் ஆன வாத்தியார் அஜித் வீட்டுக்கு போன தயிர் சாதம், தக்காளி சாதம் தருவாரு என கூறியுள்ளார். இவரின் இந்த வீடியோ தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.