நடிகை கஸ்தூரி சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்க கூடிய நபர். அரசியல், சமூக பிரச்சனை, சினிமா என அனைத்து விஷயங்களுக்காகவும் கலந்து கட்டி குரல் கொடுத்து வருகிறார். அப்படி அவர் அள்ளி விடும் கருத்துக்கள் சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவாளர்களை சில சமயங்களில் செம்ம கடுப்பாக்கி விடுகிறது. அதனால் கமெண்ட்ஸில் சகட்டு மேனிக்கு திட்டி தீர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. 

அதில் கஸ்தூரியை அளவுக்கு அதிகமாக சீண்டுவது அஜித் ரசிகர்கள் தான். அப்படி என்ன தான் அவர்களுக்கு விரோதமோ தெரியாது. கஸ்தூரி எந்த ட்வீட் போட்டாலும். உள்ளேன் அம்மா என முதல் ஆளாக ஆஜராகிவிடுகின்றனர். கடந்த சில நாட்களாகவே அஜித் ரசிகர்களின் ஆபாச ட்வீட்டுகளுடன் போராடி வந்த கஸ்தூரி, ஒரு அஜித் ரசிகர் பகிர்ந்த கொச்சையான பதிவுகளைக் கண்டு அஜித்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதையும் படிங்க: ரஜினி இடத்திற்கு சிம்புவை தயார் செய்யும் கமல்... 100 கோடி சம்பளம் கேட்டதால் நட்பில் விழுந்த விரிசல்?

கஸ்தூரியை பார்த்து அஜித் ரசிகர் கேட்ட அந்த ஆபாசமான பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்துள்ள அவர், அதை அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவிற்கு டேக் செய்து, "அஜித் சார், எவ்வளவு நாளைக்கு சும்மா இருப்பீங்க?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். போதாக்குறைக்கு வெட்க கேடு, கண்ணியமில்லாத அஜித் ரசிகர்கள், கெட்டவர்கள் போன்ற ஹேஷ்டேக்குகளையும் போட்டு, தல ஃபேன்ஸை தாறுமாறாக அவமதித்தார். 

இதையும் படிங்க: உடம்பெல்லாம் கவர்ச்சி கொழுப்பு... உள்ளாடையுடன் போஸ் கொடுத்து அலர்ஜியாக்கும் ஆன்ட்டி நடிகை கிரண்..!

அதற்கு அஜித் தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டதோ இல்லையே, ட்விட்டர் தரப்பில் இருந்து தரமான சம்பவம் நடந்துள்ளது. அஜித் மேனேஜருக்கு டேக் செய்த அதே பதிவை ட்விட்டர் நிர்வாகத்திற்கும் டேக் செய்திருந்தார். கஸ்தூரியின் பதிவைத் தொடர்ந்து, ட்விட்டர் இந்தியா நிறுவனம் அவர் குறிப்பிட்ட அந்த ஆபாச ஆசாமியின் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டது. அதற்கு நடிகை கஸ்தூரி நன்றி தெரிவித்துள்ளார்.