தல அஜித் தற்போது, 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது, பைக்கில் இருந்து அஜித் கீழே விழுந்த வீடியோ காட்சி வைரலாக பரவியது. படக்குழு தரப்பில் இருந்து அஜித்துக்கு சிறிய அளவிலான காயம் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அஜித் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என்று பரிதவித்து போகினர்.

இந்நிலையில் அஜித் நலமுடன் உள்ளார் என்பதை, ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற, அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திராவின் குடும்ப திருமணம் ஒன்றிற்கு மனைவி ஷாலினியுடன் வருகை தந்துள்ளார்.

எப்போதும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் இருக்கும் அஜித், தற்போது வலிமை படத்திற்காக செம்ம யங் லுக்கில், கோர்ட் சூட் அணிந்து வந்தார். அதே போல் அவருடைய மனைவி ஷாலினி பச்சை நிற சேலையில் வந்து   தம்பதிகளை வாழ்த்தினர்.

இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.