தல அஜித் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. 

எனவே இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித், எந்த இயக்குனர் இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்ப்பார்ப்பு, அனைத்து ரசிகர்களிடையேயும் அதிகமாகவே உள்ளது.

ஏற்கனவே அஜித்தின் அடுத்த படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டி போட்டு வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலில் படி 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் அஜித்தை எச்.வினோத் சந்தித்து, ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை அஜித்துக்கு பிடித்துவிட்டதால் அதில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.