நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் ”ஃபானி கான்” எனும் பாலிவுட் திரைப்படம் இன்று ரிலீசாகி இருக்கிறது. அனில் கபூர், ராஜ்குமார் ராவோ போன்ற பாலிவுட் பிரபலங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ,மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே பிரம்மாண்டமாக ரிலீசாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மிக முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

மிகவும் தைரியமான பெண்ணாக பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தன்னுடை நீண்ட நாள் ஆசை ஒன்றை தற்போது தெரிவித்திருக்கிறார். இந்த படத்திற்கான பிரமோஷனின் போது தான் அந்த ஆசையை அவர் தெரிவித்திருந்தார். எனக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்குள் படம் இயக்குவதற்கான ஆர்வம் தான் இப்போது அதிகமாக இருக்கிறது.

விரைவில் நான் ஒரு படத்தை இயக்க போகிறேன் என தெரிவித்திருக்கிறார். அவரின் இந்த லட்சியத்திற்கு அவரது கணவர் அபிஷேக் பச்சன் நல்ல உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

ஆனால் தன்னுள் இருக்கும் இந்த படம் இயக்கும் ஆர்வம் குறித்து பேசினாலோ, படம் இயக்கும் போது நடக்கும் நிகழ்வுகளை ஆர்வமுடன் அறிய முற்பட்டாலோ, தன்னை இயக்குனர்கள் கேலியே செய்கின்றனர் எனவும் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் இந்த பேட்டியின் மூலம் விரைவில் அவர் இயக்கத்தில் ஒரு படம் பார்க்கலாம் என்பது உறுதியாக தெரிகிறது.