பிக் பாஸ் வீட்டிற்குள் கஜினிகாந்த் படக்குழுவினர் வருகை புரிந்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியாகி இருந்த பிக் பாஸ் பிரமோவில் இது தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. கஜினிகாந்த் பட ஹீரோ ஆர்யா, ஹீரோயின் சாயிஷா, காமெடியன் சதீஷ் ஆகியோருடன் விஜய் டிவி புகழ் டிடி-யும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். இதில் சதீஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனம் செய்யக்கூடியவர். போன முறை கூட பிக் பாஸில் கமலின் கேள்வி பதில் பகுதியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

இப்போது கஜினிகாந்த் பட பிரமோஷனுக்காக வந்திருக்கும் அவர் அங்கிருக்கும் போட்டியாளர்களை செமயாக கலாய்த்திருக்கிறார். ஏற்கனவே சர்வாதிகாரி டாஸ்கில் ஐஸ்வர்யா பாலாஜி மீது குப்பையை கொட்டிய விஷயம், சென்சேஷனலாகி இருக்கிறது. இது குறித்து பிக் பாஸ் ரசிகர்களும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சதீஷ், ஐஸ்வர்யாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் ஐஸ்வர்யா கடுப்பாகி இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிக் பாஸ் பிரமோவில், அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு தான் வெளியேற வேண்டும் என கூறி இருக்கிறார்.

 

Ivanga iruko illa naan iruko 😶 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/knfAdcsk5r

— Vijay Television (@vijaytelevision) August 3, 2018

இதனை அடுத்து அவர் யாரையோ குறை கூறுகிறார். நான் பாலாஜி மேல குப்பை கொட்டினா அவருக்கு என்ன? என்ன வந்து வந்து ட்ரிகர் பண்ணுறார் என புலம்புகிறார் ஐஸ்வர்யா. அவர் கூறும் விதத்தை பார்க்கும் போது அவர் சதீஷை தான் கூறை கூறுகிறாரோ என தோன்றுகிறது. இதில் ஐஸ்வர்யாவை சென்றாயன் , யாஷிகா போன்றோர் சமாதனம் வேறு செய்கின்றனர். மொத்தத்தில் சதீஷின் வரவு பிக் பாஸில் மீண்டும் ஒரு பிரச்சனையை கொளுத்தி போட்டிருக்கிறது.