பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையான நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மகள் ஆராத்யா பள்ளி விழாவில், நடனமாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களும் தொடர்ந்து ஆராத்யாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட், கோலிவுட், என அனைத்து  திரையுலகிலும் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி விட்டாலே நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து விடும் நிலையில், திருமணமாகி குழந்தை பெற்ற பின்பும் பல இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இதற்க்கு முக்கிய காரணம் இவருக்கு உள்ள ரசிகர்கள் பலம் தான். இதே போல்... இவருடைய குழந்தை எது செய்தாலும், அதனை கண்டு ரசிப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அந்த வகையில் ஐஸ்வர்யாராயின் மகள் ஆராத்யா, தற்போது அவருடைய பள்ளியில் நடைபெற்ற விழாவில் மிகவும் எனர்ஜிடிக்காக நடனமாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த விழாவில், ஆராத்யாவின் கலக்கல் டான்ஸை கண்டு ரசிக்க அவருடைய, தந்தை அபிஷேக் பச்சன், தாய் ஐஸ்வர்யா ராய், தாத்தா, பாட்டி என அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்து, இந்த சின்ன வயதில் அம்மாவையே மிஞ்சிவிட்டார் ஆராத்யா என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.