நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனை, 'குரு' படத்தின் படப்பிடிப்பின் போது காதலிக்க துவங்கினார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் பச்சை கொடி காட்டியதால் இவர்களுடைய காதல் திருமணத்தில் முடிந்தது. 

திருமணத்திற்கு பின்பும் தான் ஒப்பந்தமான படங்களை முடித்து கொடுப்பதில் தீவிர கவனம் செலுத்தினார் ஐஸ்வர்யா ராய். 

அந்த வகையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து இந்தியில் ராவணன் படத்தில் நடித்தார். தமிழில் அபிஷேக் பச்சன் நடித்த வேடத்தில் நடிகர் விக்ரம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் ரன்வீர் கபூர் நடித்த 'ஏ தில் ஹேய் முஷ்கில்' என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆன ஐஸ்வயா ராய். தற்போது நான் நடிக்கும் படங்களில் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த திரைப்படம் 'ராவணன்'. அதே போல் இவர்கள் இருவரும் 8 வருடத்திற்கு பின் மீண்டும் ஒரு திரைப்படத்தில் கணவன் மனைவியாக இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இது குறித்து தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதற்கு முக்கிய காரணம், கடந்த சில வருடங்களாகவே இவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சனை இருந்து வருவதாகவும். இதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கவே இந்த முடிவு என கூறப்படுகிறது.